இன்றைய காலத்தில் நோய் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம், ஏனெனில் நமது உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் முற்றிலும் மாறியுள்ளது. இதனால், நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், இன்றைக்கு இரத்த குழாயில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைப்பது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.
இரத்தக் குழாயில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை, கரைக்க செய்ய வெந்தயம் உதவுகிறது. வெந்தயத்தில் இருக்கும் நார்சத்து, தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற செய்கிறது. இதனால் ரத்த குழாயில் உள்ள கொழுப்புகள் எளிதில் கரையும்.
தேவையான பொருட்கள்
குடி தண்ணீர் - 1 1/2 கிளாஸ்
தேன் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
குடிதண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து, தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில் குடித்து வரவேண்டும்.
இதை தொடர்ந்து 1 மாதத்திற்கு குடித்து வந்தால், இரத்த குழாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும். மேலும் கொலஸ்ட்ரால் வருவது தடுக்கப்படும்.