கொழும்பு:
இல்லை... இல்லை... அந்த நாட்டில் இல்லை... என்று உலக சுகாதார மையம் அறிவிச்சு இருக்கு! என்ன இல்லை?


மலேரியாவே இல்லியாம் இந்த நாட்டில் இதை சொல்லியிருப்பது உலக சுகாதார மையம்தான். அது எந்த நாடுன்னு தெரிஞ்சுக்கிறீங்களா? அந்த நாடு இலங்கைதான். இந்தியாவை விட 4 மடங்கு அதிக மழை பெய்யும் நாடு இலங்கை.


ஆனால் கடந்த வாரம் பெய்த மழையால் இந்தியாவில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. ஆனால் இலங்கைக்கு மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மலேரியாவால் ஏறக்குறைய ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதுதான் வேதனையிலும் வேதனை. 60 ஆண்டுகளுக்கு முன் மலேரியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இலங்கையில் இன்று மலேரியாவே இல்லை.


கடந்த 3.5 ஆண்டுகளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொசு ஒழிப்பு மற்றும் மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சிதான் இலங்கைக்கு இப்போது இந்த பெருமையை வாங்கி தந்துள்ளது. ஆனால் இந்தியாவில்...?


Find out more: