காய்கறிகளில் வேக வைத்து சாப்பிட கூடியவை, பச்சையாக சாப்பிட கூடியவை என்று தனித்தனியாக உள்ளது. சில காய்க்கறிகளை வேக வைத்து சாப்பிட்டால் தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
உதாரணத்திற்கு நெல்லிக்காய், வெள்ளரிக்காய், கேரட் ஆகியவற்றை பச்சையாக உண்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதன் முழு சத்துக்களையும் நாம் பெற முடியும்.
இப்போது, கட்டாயம் வேக வைத்து சாப்பிட வேண்டிய சில காய்கறிகள் பற்றி நாம் பார்க்கலாம்.
பீட் ரூட்
பீட்ரூட்டை வேக வைத்து சாப்பிட வேண்டும். அப்போது தான் அதிலுள்ள முழு சத்துக்களும் உயிர் பெறும்.
உருளை கிழங்கு
உருளை கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இதை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் பூமிக்கு அடியில், இது விளைவதால் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் இதில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நன்கு வேகவைத்து, இதை சாப்பிட வேண்டும்.
முட்டை
அவித்த முட்டை உண்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். குழந்தைகள் அவித்த முட்டை உண்டால், மூளை திறன் மேம்படும்.
பீன்ஸ்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேக வைத்த பீன்ஸ் உண்பது மிகவும் நல்லது.
பசலை கீரை
பசலை கீரையை வேக வைத்த பின்பு தான் உண்ண வேண்டும். அப்போது தான் இதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடம்பில் சேரும்.
காலி பிளவர்
காலி பிளவரில் புழுக்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் இதை நன்கு வேக வைத்து சுத்தப்படுத்திய பின்பு சாப்பிடலாம்.