அரிசோனா:
டாக்டர்களே வியந்துதான் போய் உள்ளனர் அந்த வாலிபரை பார்த்து. என்ன விஷயம் என்றால்....?
அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் சைனிஸ் ஓட்டலில் சீன இளைஞர்கள் 2 பேர் சாப்பிட வந்துள்ளனர். நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட இதில் டென்ஷனான இருவரும் நூடுல்ஸை சாப்பிட பயன்படுத்தும் குச்சியை எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு வாலிபர் தலையில் குச்சி நுழைந்து உடைந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர்களுக்கு அதிர்ச்சியும்... வியப்பும் மாறி மாறி வந்துள்ளது. ஏனென்றால் அந்த குச்சி, மண்டை ஓட்டை உடைத்து கொண்டு உள்ளே 9 செ.மீ. ஆழத்தில் மூளைக்குள் பதிந்து இருந்தது.
உடன் அதை ஆபரேஷன் செய்து டாக்டர்கள் அகற்றினர். அறுவை சிகிக்சைக்கு பின் அந்த வாலிபர் உயிர் பிழைத்துவிட்டார். பொதுவாக மூளைக்குள் இதுபோன்ற வேறு பொருட்கள் ஏதாவது புகுந்து விட்டால் உயிர் இழப்பு ஏற்பட்டு விடும்.
ஆனால், இந்த வாலிபரின் மூளையில் 9 செ.மீ. குச்சி பாய்ந்திருந்தும்... அவர் உயிர் பிழைத்திருப்பது ஆச்சரியம் என்று டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.