பிரிட்டன்:
எந்திரன் படத்தில் பெண்ணுக்கு இயந்திர மனிதன் ரஜினி பிரசவம் பார்ப்பது போல் காட்சி இருப்பது போல் ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்தவர் பில் பியவர். இவரது விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒருபகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலம் வளர்ந்துள்ளது. இதை இயந்திர மனிதனை வைத்து உரித்து எடுத்துள்ளனர் டாக்டர்கள். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த நோயாளிக்கு கண் பார்வை சரியாகி உள்ளது.
ஆக்ஸ்போர்டில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் பேராசிரியர் ராபர்ட் மேக்லாரென். உலகிலேயே முதன் முறையாக ரோபோவை பயன்படுத்தி இத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.