எந்த வலியை வேண்டுமென்றாலும் தாங்கி விடலாம். ஆனால் தலை வலியை மட்டும் தாங்கி கொள்ளவே முடியாது. இதில் நம் அனைவருக்குமே அனுபவம் உண்டு. தலை வலியை, குணப்படுத்த நாம் பெரும்பாலும் மாத்திரைகள் உபோயோகப்படுத்துவோம். ஆனால் இது வலியை உடனே சரி செய்து விட்டாலும், பின்னாளில், பக்க விளைவுகளை உண்டாக்கும். 


அதனால் பாட்டி வைத்தியத்தின் மூலம் நாம் தலைவலியை குணப்படுத்திவிடலாம். 


தேவையான பொருட்கள் :


சுக்கு - 1 துண்டு
எலுமிச்சை சாறு 


முதலில் குடிக்கும் தண்ணீரை, நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதனுடன் சுக்கு துண்டை சேர்த்து, மீண்டும் நன்கு கொதிக்க விடுங்கள். 


10 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தலைவலி உடனே சரியடையும். 


முட்டை கோஸ் இலையை, நீர் விடாமல் அரைத்து, அதை தலையில் பற்று போட்டாலும் தலைவலி உடனே நீங்கும்.


Find out more: