மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமத்தை பற்றி இன்றைக்கு நாம் தெரிந்து கொள்வோம். 


1. அடிக்கடி உடல் களைப்பு ஏற்படுபவர்கள், ஓமத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, அதனுடன் பனை வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் உடல் களைப்பு தீரும். 


2. ஓமம், சுக்கு, ஆகிய இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவைத்து, குடித்து வந்தால் அஜீரண கோளாறுகள் சரியடையும். 


3. வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும், ஓமம் சரி செய்து விடுகிறது. 


4. ஓமம் பசியை தூண்ட செய்கிறது. 


5. சிறிது தண்ணீரில், ஒரு கரண்டி ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் 100 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி, கற்பூர பொடியை கலந்து இடுப்பில் தேய்த்து வந்தால், இடுப்பு வலி நீங்கும்.


Find out more: