பெங்களூர்:
12.45 நிமிட பயணம்... ஆம்புலன்சில் பறந்த இதயம்... இதயம்... என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம், மற்றொருவருக்காக பெங்களூர் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு 12.45 நிமிடத்தில், ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது.
பெங்களூர் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.
இதற்காக என்.ஆர் சந்திப்பு, கே.ஜி.ரோடு, மைசூரு பேங்க் சர்க்கிள், பழைய ஹைகிரவுண்ட் சாலை, சி.வி.ரமணன் ரோடு வழியாக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 5.45 மணி முதல் 6.45 மணி வரை அந்த வழியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் ஒரே நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 12.45 நிமிடத்தில் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையை அடைந்தது. இதற்காக ஒத்துழைத்த பொதுமக்களுக்கு பெங்களூர் போலீசார் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.