சென்னை:
செய்வதை திருந்தச் செய்.. அதையும் இன்றே செய்... அழுகும் உடலை தானம் செய்... உயிருடன் இருப்பவர்களுக்கு உன் இறப்பில் கூட நன்மையை செய்... கடந்த காலம் மறந்த காலமாக இருக்கட்டும். கண்களில் ஆரம்பித்து, கிட்னி, இதயம், கல்லீரல் என கொடுக்க முடிவதை கொடுத்தால் இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்வோம். யோசிப்போமா? யோசிப்போம்... செயலாற்றுவோம்.


இன்று உயிரும் உலாவும் நமக்கு மனிதர் என்று பெயர். நாளை இறந்து விட்டால் நமக்கு பெயர்? பிணம்... பிணம்... பிணம்தான். இறந்த பின்தான் நாம் நம் உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முடியும். நாம் என்பது நம்மை மட்டுமல்ல... நம் குடும்பத்தையும் சேர்த்துதான். புரியதவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் தருவதில் தயக்கம்... அந்த தயக்கமே உயிருடன் இருந்து உறுப்புகளை இழந்து தவிப்பவர்களின் வாழ்க்கையுடன் நாமும் சேர்ந்து விளையாடுவது ஆகும்.


ஒரு சிறிய விபரத்தை பார்ப்போமா? இறந்த பின் நம் உடல் என்னவாகிறது. எரித்தால் ஒரு பிடி சாம்பல்... புதைத்தால்...


இறந்தவர்களை புதைத்த அந்த உடலில் 36 மணிநேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன. 50 மணிநேரம்... லார்வாக்கள் தோன்றுகின்றன. 3 நாளில் நகம் கழன்று உனக்கு எனக்கும் என்ன தொடர்பு என்கிறது. 4 நாட்களில் ஈறுகள் மாயமாய் மறைகின்றன. 5வது நாளில் மூளை திரவமாகி வடிகிறது. 6ம் நாள் ஆங்காங்கே வாயுக்கள் வெளியாக துடித்து வயிற்றை சிதைக்கிறது. 2 மாதம் உடல் என்று சொன்னது கூட இருக்காது திரவமாகி மண்ணோடு மண்ணாகிறது. 


இவ்வளவுதான். இதற்காகதான் நாம் வாழும் காலத்தில் அன்பில்லாதவர்களாக ஆடும் ஆட்டமும், இனிமையான பேச்சை மறந்து நடக்கிறோம். இறந்த பின்பும் நாம் உயிர்வாழ்வது என்பது உடல் உறுப்புகளால்... உங்களால் எத்தனை பேர் வாழ முடியும்.... கண்களால் 2 பேர், இதயத்தால் ஒருவர், கல்லீரலால் ஒருவர் என்று ஒற்றையாய் இருந்த நீங்கள் பலராய் வாழலாமே...  யோசியுங்கள்... திடமாய் யோசியுங்கள்... பலராய் வாழுங்கள்...


Find out more: