சென்னை:
தண்ணீருக்கு சிறிது நேரம் இருந்தாலே மூச்சு முட்டி வெளியில் வந்து ஆக்சிஜனை நாம் தேடுவோம். ஆனால் நீரிலேயே இருக்கும் மீன்கள்.
அட இது என்ன பெரிய விஷயம். அவைகள் தண்ணீருக்குள்ளேயே சுவாசிக்கும் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். இதேபோல் தண்ணீருக்குள் வசிக்கும் முதலை, தவளை, ஜெல்லி மீன் அனைத்தும் நீருக்குள் சுவாசிக்கும் திறன் கொண்டதுதான். ஆனால் நீர் விலங்குகளில் பெரியது திமிங்கிலம். இந்த திமிங்கிலத்தால் நீருக்குள்ளேயே சுவாசிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா.
உண்மைதான். திமிங்கிலங்களால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. நீரில் இருந்து தலையை வெளியே நீடடி சுவாசிக்கும். திமிங்கிலங்கள் சுவாசிக்கும் போது பவுண்டன் நீர் போல் செம வேகமாக தண்ணீர் மேல் எழுவது அது சுவாசிப்பதால்தான். தெரிந்து கொண்டதில் இது மூன்று.