சிட்னி:
ஊர்ந்து ஊர்ந்தே ஊருக்குள் வந்த கடல் சீல் மீண்டும் பொதுமக்களால் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.
குளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், தரையிலும் வாழம் அமைப்பை கொண்டவை. குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். இது வழக்கமான ஒன்று.
ஆனால் அதை எல்லாம் தாண்டி ஆஸ்திரேலியாவில் ஒரு கடல் சீல் கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊர்ந்தே ஊருக்குள் வந்து விட்டது. அங்கு டாஸ்மானியாவில் உள்ள டேவன்போட் என்ற இடத்தில் இவ்வாறு சீல் கரைப் பகுதிக்கு வந்து அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் படுத்திருந்தது.
இதை பார்த்து பெண் ஒருவர் பார்த்து அலற ஓடி வந்து பார்த்த பொதுமக்கள் 120 கிலோ எடை உடைய அந்த சீலை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். எப்படி இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு ஊர்ந்து வந்தது என்று மக்கள் ஆச்சரியப்பட்டு விட்டனர்.