கோலாப்பூர்:
தரையில் நடப்பது சாதாரணம்... இதே 600 அடி உயரத்தில் நடந்தால் சாதனைதானே... அப்படி நடந்துள்ளது ஒரு திருமணம். எங்கு தெரியுங்களா?


மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் 600 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கியபடியே, திருமணம் செய்து சாதனை படைத்துள்ளார். 


கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மலையேற்ற வீரர் ஜெய்தீப் ஜாதவ். இவருக்கும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வரும் ரேஷ்மா பாட்டீல் என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.


திருமணத்தை நீங்க நிச்சயம் செய்யுங்க... ஆனால் அது எங்க நடக்கணும்னு நான் பார்த்துக்கிறேன் என்று களத்தில் குதித்த ஜெய்தீப் மலையேற்ற விளையாட்டு குறித்த ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக தன் திருமணம் இருக்க வேண்டும் என்று முடிவை செய்தார். இதற்கு, ரேஷ்மாவும் ஒப்புக் கொண்டார். 


அப்புறம் என்ன? நடந்தது அந்த சாதனை திருமணம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இரு சிகரங்களை இணைக்கும் வகையில் 600 அடி உயரத்தில் உறுதியான பிளாஸ்டிக் கயிறுகள் கட்டப்பட்டன. கயிற்றில் தொங்கியபடி ஜெய்தீப்பும், ரேஷ்மாவும் கயிற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.


மற்றொரு கயிற்றில் தொங்கியபடி திருமண மந்திரங்களை புரோகிதர் ஓத, ரேஷ்மா கழுத்தில் ஜெய்தீப் தாலி கட்டினார். இருவரும், மாலைகளையும் மாற்றிக் கொண்டனர். இந்த அரிய திருமணத்தை 1,200 பேர் பார்த்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


Find out more: