சென்னை:
இப்போ... பெரிய பெரிய பில்டிங், ஷாப்பிங் மால், மிகப்பெரிய அபார்ட்மெண்ட் இதில் எல்லாம் மக்கள் வசதிக்காக லிப்ட்டுன்னு ஒன்றை இயக்குறாங்களே... அது எப்போ உருவாக்கப்பட்டது தெரியுமா? தெரிஞ்சுக்குவோமா!


நிமிர்ந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி கொள்ளும் அளவிற்கு, விண்ணை எட்டிவிடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு இப்போது எங்கு பார்த்தாலும்... பல மாடி கட்டிடங்கள்தான். இதில் ஏறி இறங்கினால் போதும்... ஏறும் போது குண்டாக இருப்பவர்கள் இறங்கும்போது ஒல்லியாக மாறிவிடுவார்கள்.


எதுக்குப்பா... இந்த தகவல் என்கிறீர்களா... இந்த சிரமத்தை போக்கதான் சொய்ங்ன்னு... மக்களை மேலே அழைச்சுக்கிட்டு போய்விட்டு.... கீழே இறக்கி விடுதே... லிப்ட்... இது எப்போ உருவாக்கினாங்க தெரியுங்களா?


பிரான்ஸ் மன்னர் 15ம் லூயியின் வசதிக்காக முதலில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த லிப்ட். இப்போ... டெக்னாலஜி... மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப விதவிதமாக வந்திடுச்சு லிப்ட். அறிந்து கொண்ட முத்துக்களில் இது நான்காவது.


Find out more: