சென்னை:
ஏங்க இந்த நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை விலங்குகளால் எப்படி உணர முடியுதுன்னு தெரியுங்களா?


தெரிஞ்சுக்குவோமா! மனிதர்களின் காதுகள் அறியாத மிக நுண் ஒலியான  இன்ப்ராசவுண்டை கேட்கும் திறன் சில விலங்குகளுக்கு இருக்கு. அட ரமணா படத்தில் கூட பில்டிங் அதிரும் உணர்வை நாய் உணர்ந்து கொண்டு கத்துவது போல் ஒரு காட்சி இருக்கும் இல்லியா. அதேதான்... அதேதான்...


இந்த இன்ப்ரா சவுண்ட் அகவொலி என்று அழைக்கப்படுகிறது. இந்த நுண் ஒலியை நம்மால் கேட்க முடிவதில்லை. இயற்கை பேரிடர்கள் தாறுமாறான அகவொலியை ஏற்படுத்தும். இதை உணரும் திறனுடைய விலங்குகள் குழப்பம் அடைந்து அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடும். அலல்து அங்கும் இங்கும் தாறுமாறாக அலையும். என்ன விஷயம் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அறிந்து கொண்டதில் இதில் ஒன்று. 



Find out more: