சென்னை:
ஆரம்பித்ததும் தெரியலை... முடிந்ததும் தெரியலையேன்னு சொல்றாங்க... சொல்றாங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில மணிநேரத்திலேயே முடிவடைந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்க...
சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஜனவரி மாதம் 14-ந் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது.
இதற்காக சென்டரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், தியாகராயநகர், என பல ரயில் நிலையங்களில் பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டுகளை போல நீண்ட க்யூவோ... நெரிசலோ இல்ல என்றுதான் கூறவேண்டுமு;.
முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் முடிந்து காத்திருப்போர் பட்டியல் காணப்பட்டது.
இதேபோல் அனைத்து ரயில்களுக்குமான முன்பதிவும் முடிந்து காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது. இது 12ம் தேதிக்கான முன்பதிவு. இன்று ஜனவரி 13-ந் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. இதனால் இன்றும் முன்பதிவு விரைவாக முடிந்து விடும் என்று தெரிகிறது.