அர்ஜென்டினா:


எப்படி? எப்படி? இயற்கையின் வரப்பிரசாதமா அல்லது ஏலியன்களின் வேலையா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது ஒரு சின்னஞ்சிறு தீவு. அப்படி அதில் என்ன விசேஷம் தெரியுங்களா?


அர்ஜென்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. "ஐ" என்று பெயரிடப்பட்டுள்ள இப்பகுதி கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அர்ஜென்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் என்பவர் கண்டுபிடித்தார்.


இந்த தீவே பெரும் அதிசயமாக உள்ளது. வட்டமாக அமைந்துள்ள இந்த நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருகிறது என்றால் நம்புவீர்களா?


ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம்  இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றிதான் வருகின்றன. அதாவது பூமி உருண்டை சுழல்வதுபோல். இதனால் இங்கு இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை.


நாளுக்கு நாள் ஒவ்வொரு இடமாக நகர்ந்து விடுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... இங்குள்ள தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்காம். சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்று ஒரு பீதியை கிளப்புகிறார்கள். சிலரோ... இது இயற்கை கொடுத்த அற்புத கொடை என்கின்றனர்.


Find out more: