தஞ்சாவூர்:
மனம் ஏங்குதே... அன்றைய நாட்களை நினைத்து மனம் ஏங்குதே என்று பழங்கால வீடுகளை பார்க்கும் மூளைக்குள் கொசுவர்த்தி சுருள் சுற்றுகிறது. அட அதாங்க பிளாஸ்பேக்... சினிமா போல் சொல்வதாக இருந்தாலும் அன்றைய நினைவுகள் தாலாட்டும்... தங்க தட்டில் கூட ஊட்டும். 

Displaying sp 4.jpg

அன்றைய வீடுகள் நம் முன்னோர்களால் திட்டமிட்டு கட்டப்பட்டவை. ஆளுயர திண்ணைகளும்... வராண்டாவும், வெளிச்சத்தை உள்ளே கொண்டு வந்து கொட்டும் முற்றமும்... நீண்ட தாழ்வாரமும், கொல்லைப்புறமும்... வேப்பமரம் சூழ்ந்த வீடும் என்றும் மறக்க முடியாதவை.

Image result for old house in kerala

வீடுகளில் தாங்கி நிற்கும் மரத்தூண்கள்... மரத்தாலேயே அமைந்த பரண் என்று அட்டகாசமான அமைப்புடன் இருக்கும் வீடுகள் மக்களுக்கு நோயற்ற வாழ்வை நீடித்து வழங்கியது என்றால் உண்மைதானே! ஆரோக்கியத்தை அள்ளி வழங்கிய வீடுகள் இன்று மாற்றம் பெற்று அழகு பெற்று இருந்தாலும் அவற்றால் என்ன பயன் என்றுதான் கேட்க வேண்டி உள்ளது.


இரும்பு தகடுகள் கூட தோற்று போகும் இந்த காலத்தில் தேக்கினால் செய்த கதவுகள் வீடுகளை பாதுகாத்தன. அதுமட்டுமா... தேக்கு கதவில் மோதி வரும் காற்று சுத்தத்தை அள்ளிக் கொடுத்து மக்களை வாழ்வாங்கு வாழ வைத்தது.

Displaying sp 2.jpg

குளுமை கொஞ்சி விளையாடும். வெப்பம் எட்டி நின்று வேடிக்கை பார்க்கும். அப்படிப்பட்ட வீடுகள் இன்று நினைத்து பார்த்தால் வருமா...
வருமா... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சுற்றி விளையாடிய தூண்கள் மறைய... முற்றம் முறிந்து போக... தாழ்வாரம் தகர்ந்து போக இன்று காற்றுக்காக வீட்டின் முன்புறம் மேல் தளத்தில் காற்றுக்காக ஏங்கி நிற்க வேண்டி இருக்கும் நிலைதான்.


சிமெண்டால் இழைத்த வீடுகள் தரும் குளுமை இன்றைய ஏ.சி. மிஷின்களால் கூட கொடுக்க முடியாதே... முற்றத்தில் கட்டில் போட்டு உறங்கிய நாட்களின் நினைவுகள்தான் மிச்சம் இருக்கிறது. பார்ப்பவர்கள் பாராட்ட வேண்டும் என்று அக்கம்பக்கத்தினருக்காக வாழும் வாழ்க்கைதான் இன்று உள்ளது.

Displaying sp 1.JPG

அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரமும், புறாக்கூண்டு போன்ற வீடுகளும், ஆடம்பரத்தை காட்ட கடப்பா கற்களும் கட்டிய வீடுகள் கொடுப்பது என்ன காற்றையா... வெளிச்சத்தையா... ஆரோக்கியத்தையா... இல்லையே... இல்லையே... நோய்களையும்... உடல் தொந்தரவுகளையும்தானே... 

Displaying sp 5.jpg

சிறிது நேரம் வெற்றுத்தரையில் உருண்டு புரண்ட நம்மால் இக்கால வீடுகளில் அப்படி செய்ய முடியமா? முடியாதே... வாஸ்தில் ஆரம்பித்து வேறு என்ன விஷயங்கள் உள்ளதோ அனைத்தையும் பார்த்து பார்த்து கட்டும் வீடுகளில் காற்றுக்கான வழியின்றி போய்விடுகிறதே! சற்றே யோசிப்போம்... நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்க்கை நம் வீடுகளில் இனி வாழ போகும் அடுத்த தலைமுறைக்கும் நீங்கள் தர வேண்டாமா?


காற்றுள்ள வீடே ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம். முன்னோர்களின் பாதையை பின்பற்றுவோம்... நிம்மதியாக வாழ்வோம்.



Find out more: