சென்னை:
வம்பு நடிகர் மீண்டும் தூது விட்டு இருக்காராம் பெரிய நம்பர் நடிகைக்கு... அட வேற மாதிரி நினைக்காதீங்கப்பா...
சின்னபுள்ளைங்களை வைத்து படம் பண்ணிய இயக்குனர் வம்பையும், பெரிய நம்பர் நடிகையும் சேர்ந்து படம் ஆரம்பிச்சார்... முடிச்சார்...

ஆனா... இதோ... அதோன்னு போய்கிட்டே இருந்துட்டு சமீபத்தில் படம் ஒருவழியா திரைக்கு வந்திடுச்சு.
இந்த படத்தை ரசிகர்கள் உற்சாகத்தோட கொண்டாட வம்பு மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துட்டார்.

ஆனா இதுக்கு முக்கிய காரணம் பெரிய நம்பர் நடிகைதான்னு அவரோ சகப்பொடிகள் சொல்ல யோசிச்சு இருக்கார்.. ஆஹா வடையை மிஸ் பண்ணிட்டோம்மேன்னு வருத்தப்பட்டாலும் இனிமே அதுக்கு ஒன்னும் செய்ய முடியாதுல்ல...

அட காதல் போனால் போகட்டும்னு... அடுத்து நடிக்க இருக்கிற படத்துல ஜோடியோ போட்டுடுவோம்னு தூது விட்டு இருக்காராம். சிக்குவாரா பெரிய நம்பர்... போன படத்துல பட்டதே போதும்டா சாமின்னு கதவை டப்புன்னு அடைச்சிட்டாராம்.



Find out more: