மும்பை:
வெள்ளாவியில் வைச்சு வெளுத்த பொண்ணு பார்க்கத்தான் சும்மா ஸ்டைலா... மாடர்ன்னா இருக்கு... ஆனா சரியான அம்பி வகையறாவாம். விஷயம் என்ன தெரியுங்களா?


இந்த பொண்ணுக்கு சின்ன வயசுல இருந்து பைக் ஓட்ட வேண்டும் என்ற பெரிய ஆசையாம். ஆனா ரோட்டுல இவர் மட்டும்தான் ஓட்டணும்னு நினைச்சிருக்கார். அது நடக்குமா...சர்ரு... புர்ரு... சாலையில வேகமா போற வாகனங்களை பார்த்து மிரண்ட வெள்ளாவி பொண்ணு நொந்து நூடுல்ஸ் ஆயிடுச்சு.


அப்புறம் என்ன இதுவரைக்கும் ஆசை... ஆசையாவே இருக்காம். இப்ப என்ன அதுக்கு கேட்காதீங்க... இனிமேதான் இருக்கு ஹைலைட் மேட்டர்.


சமீபத்தில் இந்த பொண்ணு நடிக்கிற பாலிவுட் படத்தோட ஷீட்டிங்ல பைக் கொடுத்து டிரைவ் பண்ற காட்சி வைக்க பொண்ணு மிரண்டு போய் மயக்கம் போடாத குறைதானாம்... வழி தெரியாமல் விழி பிதுங்கி போயிடுச்சாம். அப்புறம் ஒரு வழியா அப்படி இப்படின்னு அந்த காட்சியை எடுத்தாங்களாம்.



Find out more: