சென்னை:
கதாநாயகியோட தம்பி சினிமாவில் நடிக்க வந்தா ஹீரோவாகத்தானே நடிக்கணும். இப்ப அதெல்லாம் இல்ல பாஸ். வில்லனுக்குதான் இப்ப மாஸ். அப்படி யார் நடிக்க வந்திருக்காங்கன்னு கேட்கிறீங்களா?
நடிகை அமலாபாலின் தம்பிதான். அவரோட பேரு அபிஜித் பால். சில மலையாளப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்பது இவரது தணியாத ஆசையாம்.
இதற்காக தனது அக்காவிடம் நடிப்பு பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுசரி... இது தவிர நடன பயிற்சி, சண்டை பயிற்சியும் பெற்று வந்தார்.
இந்நிலையில் அமலாபால் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘தேவி’ படத்தில் அபிஜித் பால் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மச்சானை வில்லனாக்கிட்டார்.
இந்த படத்தில் நடிக்கும் அபிஜித் மீது அக்கறை கொண்டுள்ள அமலாபால், தம்பி நடிக்கும் இடத்துக்கே சென்று நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார். சிறப்பான நடிப்பை அபிஜித் வெளிப்படுத்துகிறார் என்று படக்குழுவினர் வேறு பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர்.