சென்னை:
கடந்த 2 நாட்களாக "கபாலி" கண்ணு பட்டுடுச்சு போலிருக்கு... ஏகப்பட்ட வதந்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி. மனம் நொந்து போய் உள்ளனராம் அவரது குடும்பத்தினர். இந்த வதந்தி தொடர்ந்ததால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நிலை வெளியான தவறான தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 
சூப்பர்ஸ்டார் நடந்தாலும் செய்தி.... ரெஸ்ட் எடுத்தாலும் தலைப்பு செய்திதான். ஆனால் "கபாலி"க்கு கண்பட்டுடுச்சு போலிருக்கு. கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலையை பற்றிய வதந்திதான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. ரஜினிகாந்த் 2.0 படத்திற்காக அமெரிக்கா சென்றார். அங்கு படபிடிப்பு முடிந்த நிலையிலும் அவர்  அங்கு தங்கியுள்ளார்.


 
இந்நிலையில் ரஜினிகாந்த் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதைவிட அவரது ரசிகர்கள் பலர் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறைதான்.

அவ்வளவு ஏன் பேஸ்புக்கில் ஆரம்பித்து... வாட்ஸ் அப் வரை ரஜினியின் உடல்நிலை பற்றிய பேச்சுதான். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நிலை வெளியான தவறான தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை காவல்துறையில் ரஜினிகாந்த் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினி நன்கு ஆரோக்கியமாக இருப்பதாக அவரது குடும்பத்தினரும் கபாலி படக்குழுவினரும் தெரிவித்துள்ளனர்.
 
விரைவில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் வெளிவரயுள்ள நிலையில், இது போன்ற சம்வங்கள் அவரை மிகவும் காயப்படுத்தும் என்று குமுறி தீர்க்கின்றனர் அவரது ரசிகர்கள்... கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பது சும்மாவா? 



Find out more: