"கபாலிடா" ரிலீஸ் வரைக்கும் கலக்குவோம்... அதுக்கு அப்புறமா அதிரடிப்போம் என்று படக்குழுவினர் வெகு தீர்மானம் செய்துள்ளனர் போல் உள்ளது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக கபாலி பற்றி புதுபுது தகவல்கள் வெளிவந்தபடியே உள்ளது. அதில் இது முக்கியமானது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்குது கபாலி படம். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை செய்து முடிச்சிருக்கு. எப்படி தெரியுங்களா? முதலில் வெளிவந்த டீசர் கலக்கு கலக்கு என்று கலக்கி எடுத்து விட்டது. செம சாதனைகளை செய்துவிட்டு "சைலண்ட் மோடிலேயே" இருக்கிறது கபாலி டீம்.


படத்தோடு பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு செம ஹிட் அடித்துள்ளது. "நெருப்புடா" பாடலை பொடிசுகள் முதல் இளசுகள் வரை காலர் டியூனாக்கி ரசிக்கின்றனர். இப்போ புதுசா ஒரு மேட்டரு லீக் ஆகி இருக்கு... இதையும் கபாலி டீம் ரகசியமாக வைத்துள்ளனராம். 
இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இளமையான தோற்றத்தில் ரஜினி வருவது டீசரிலேயே தெரிந்து விட்டது.  பிளாஷ்பேக் ரஜினிக்கு குத்துப்பாட்டு ஒன்றை சைண்ட்டாக எடுத்துள்ளனராம். பாடல் வெளியீட்டின் போது வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர். ரஜினியின் இந்த குத்துப்பாட்டுக்கு திரை அரங்கமே அதிரோ... அதிருன்னு அதிர போவது என்னவோ உண்மையிலும் உண்மை. கலக்குங்க கபாலி.


Find out more: