சென்னை:
பெப்சி பாட்டிலை பார்த்தால் நகைச்சுவை நடிகர் சுகுமார் ஞாபகம்தான் மனதில் வரும். காதல் படத்தில் கிடைத்த காமெடியின் பலன் இது. இப்போ இவரு 2வது படத்தை இயக்கும் இயக்குனர் ஆகி விட்டார்.


காதல் படத்திற்கு பிறகு பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த இவர்... தடாலடியாக ‘திருட்டு விசிடி’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். படம் ஓடியதா என்று கேட்கக்கூடாது.


இதையடுத்து மனம் தளராத விக்ரமாதித்தன் போல் மீண்டும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தை இயக்குகிறார். இது கூத்து கலையை பற்றியதாம். முதல் படத்தில் செய்த தப்புகளை திருத்திக் கொண்டு இந்த படத்தை இயக்குவதாக வாய்ஸ் விட்டுள்ளார் இவர். எப்படியோ... நல்லதை கொடுத்து முன்னேறினா சரிதான்.



Find out more: