சென்னை:
பாகுபலி 2 எல்லாரையும் எதிர்பார்க்க வைச்சிருக்கிற படம். தமிழ் மக்கள் இப்படி அடுத்த பார்ட்டுக்காக எதிர்பார்த்திருப்பது என்பது இதுவே முதல்முறை... ஆனா படம் அடுத்த ஆண்டுதான் வரும்னு பேசிக்கிறாங்க. எப்ப வந்தாலும் சரி நாங்க வெயிட்டிங்னு சத்தம் வருது. விஷயம் அது இல்ல. இப்பவே இந்த படத்தை வாங்க போட்டி நடக்குதாம். அதுதான் பாகுபலி-2.
பாகுபலி பார்ட் 1ல் அந்த துரோகி நான்தான் என்று கட்டப்பா சத்யராஜ் சொல்வதோடு நிறுத்திப்புட்டாங்க... நம்ம தமிழ் ஆளுங்க கட்டப்பா ஏன் இப்படி செய்தார்ன்னு பார்க்க காத்திருக்காங்க. அதுக்கு நாமதானே படத்தை எடுக்கணும் என்று பாகுபலி பார்ட் 2 படத்துக்கான தமிழ் உரிமையை வாங்க சடுகுடுவே நடக்குதாம்.
பர்ஸ்ட் பார்ட்டை எடுத்த பசுமையான தயாரிப்பு இந்த படத்துல செம கல்லா கட்டியது அனைவரும் கண்கூடாக பார்த்ததால் பார்ட் 2வை வாங்க இப்பவே அலைமோதுறாங்க... ஆனால் தற்போது பசுமை தயாரிப்பு பெரும் பொருளாதார சீர்குலைவில் இருப்பதால் பொறுமை காத்து வர்றாராம். அடுத்த ஆண்டு வர்ற படத்துக்கு இப்பவே போட்டியா?