சென்னை:
நம்ம ரசிகர்கள் ரொம்ப நல்லவங்கன்னுதான் சொல்ல தோணுது. காரணம் இருக்குங்க. ஊரார் வீட்டு பிள்ளையை ஊட்டி மட்டும் இல்லீங்க சீராட்டிக்கூட வளர்ப்பாங்க ஆனா நம்ம வீட்டு குழந்தையை தெருவில விட்டுடுவாங்க... அப்படிதான் நடந்து இருக்கு. என்ன விஷயம் தெரியுங்களா?
6 மாதம் முடிய போற இந்த நிலையில கோடம்பாக்கமே கோபமாக இருக்கு எதுக்கு? இந்த 6 மாசத்தில கிட்டத்தட்ட 100 படங்கள் வெளியாகி இருக்கு. ஆனா ஜெயிச்சதுன்னு பார்த்த இரண்டு கையில இருக்கிற விரல்கள் போதும் போல அவ்வளவு படங்களைதான் நம்ம ஆளுங்க ஜெயிக்க வைச்சிருக்காங்க. இதுல தெறி, ரஜினிமுருகன், பிச்சைக்காரன், தோழா, இது நம்ம ஆளு, இறுதிச்சுற்று, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சேதுபதி, மிருதன், மருது ஆகிய படங்கள்தான்.
அவ்வளவுதாங்க... அவ்வளவே அவ்வளவுதான். அப்ப மற்ற படங்கள் வந்த வேகமும் தெரியலை... போன வேகமும் புரியலை. நல்லப்படம்தான் ஆனா போட்ட காசை மட்டும் காப்பாத்தி கொடுத்திடுச்சுன்னு சில படங்களை போனா போகுதுன்னு நம்ம ஆளுங்க பார்த்திருக்காங்க.. அதுல 24, பெங்களூர் நாட்கள், காதலும் கடந்து போகும், இறைவி, மனிதன், விசாரணை, உறியடி, ஒரு நாள் கூத்து, ஆறாது சினம், ஜீரோ படங்கள் ஏதோ ஒட்டிக்கிட்டு தப்பிச்சிருக்கு.
இதுல என்ன வேடிக்கைன்னா... 6 மாசத்துல வந்த நம்ம படங்களை கல்லாக்கட்டினதை விட கோடை நாட்களை குறிவைச்சு வந்து செமத்தியா கல்லாக்கட்டின ஹாலிவுட் படங்கள் எண்ணிக்கை என்னவோ கம்மிதான். ஆனா கோடியில அள்ளி கொடுத்து இருக்காங்க நம்ம ஆளுங்க. வந்தது 10க்குள்ள இருந்ததாலும் அந்த படங்கள் நம்ம படங்கள் எடுத்த வசூலை விட 10 மடங்கு அதிகம்கிறதுதான் வேதனை... என்னவோ போங்கப்பா...