சென்னை:
பாட்ஷா ரீமேக்கில இவரு நடிச்சா சூப்பரோ... சூப்பரு என்று சொல்லி அடிச்சிருக்காரு கில்லி... யாரு... யாரை சொன்னாங்க தெரியுங்களா?


நேற்று விஜய்க்கு பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து கூறி பிரபலங்கள் பேசியிருக்காங்க... அப்ப "கில்லி" அடிச்ச இயக்குனர் தரணி சொன்னதுதான் ஹைலைட். 


சூப்பர் ஸ்டார் நடிச்ச ரஜினி நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்க வேண்டும் என்று போட்டாரே ஒரு போடு. முன்பே பாட்ஷாவை ரீமேக் செய்த முயற்சிகள் புஸ்வாணம் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் பிறந்தநாளை ஒட்டி மீண்டும் இந்த படம் பற்றி பேச்சு ஆரம்பித்து விட்டது.


இப்போ கோலிவுட் பூராவும் இந்த பேச்சுதான். அப்ப அடுத்த பாட்ஷாவாக விஜய் ரெடியா?



Find out more: