சென்னை:
ஏங்க... இடுப்பை கிள்ளிப்புட்டாங்க... இடுப்பை கிள்ளிப்புட்டாங்கன்னு சிவகார்த்திகேயன் சொல்லியிருக்கார். யார் இடுப்பை என்று கேட்கிறீங்களா?


கிடுகிடுவென முன்னேறி வரும் சிவகார்த்திகேயன் அதிக பொருட்செலவில் நடிததுள்ள படம்தான் ரெமோ. இந்த படத்தில் இவர் நர்ஸ் கெட்டப்பில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் நிகழ்சச் நடந்தது. இதில்தான் சிவகார்த்தி ஒரு உண்மையை போட்டு உடைத்தார். 


இந்த படத்துக்காக மேக்கப்பில் மிகவும் சிரமப்பட்டேன். நான்தான் பெண் வேடத்தில் இருக்கிறேன் என்று தெரியாமல் ஷீட்டிங்கில் ஒருவர் என் இடுப்பை பிடித்து கிள்ளிவிட்டார். வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடந்தபோது யார் இந்த ஹீரோயின் என்று கேட்டார்கள். அந்தளவிற்கு மேக்கப் சூப்பராக போட்டு இருந்தார்கள் என்றார். 


விழாவில் பேசிய அனைவரும் சிவகார்த்திகேயனின் பெண் கெட்டப் சூப்பர்ப் என்று சொன்னதுதான் ஹைலைட்.


Find out more: