ஐதராபாத்:
பாகுபலி 2வுக்காக எல்லாரும் காத்திருக்க... அந்த படத்தோட படப்பிடிப்பை நடத்திய பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நானி.


இயக்குநர் ராஜமௌலிக்குப் பதில் நடிகர் நானி பாகுபலி 2 படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் என்பதுதான் தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தி. தெலுங்கு சினிமாவில் நானிக்கு தனி இடம் கிடைச்சிருக்கு. ஆனால் ஆரம்பத்தில் அவர் உதவி இயக்குனர் என்பதுதான் உண்மை. 


நானி தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து இருக்கு. அங்கேதான் பாகுபலி2ன் படப்பிடிப்பு நடைபெற்று வருது; 


அப்போ சும்மா விசிட் அடித்த நானி, ராஜமௌலிக்கிட்ட அனுமதி வாங்கி சில காட்சிகளை இயக்கி இருக்கிறார் என்பதுதான் டாக் ஆப் த சிட்டி. இதுல முக்கியமான விஷயம்.. நானி ஆக்சன் சொல்லும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டிரு படக்குழு.



Find out more: