சென்னை:
டுவிட்டரில் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்த ராம்கோபால் வர்மாவை இப்ப சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செமத்தியாக வம்புக்கு இழுத்துள்ளனர்.


"கபாலி" வர்றதுக்குள்ள ரஜினியை சமூக வலைத்தளத்தில் இஷ்டத்துக்கு எழுதி வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார் ராம்கோபால் வர்மா. பொறுமை காத்து காத்து ஒருக்கட்டத்தில் பொங்கி எழ இருந்த ரசிகர்கள் கபாலி டீசர் வெளியீட்டால் அமைதி காத்தனர்.


டீசர் போட்ட சக்கை போடு, சாதனை இப்போ ரசிகர்களை உற்சாகப்டுத்த, அடுத்து வந்த பாடல்கள் பட்டித்தொட்டி வரை செமத்தியான வரவேற்பை பெற்றது. அப்புறம் என்ன எங்க தலைவரையா வம்புக்கு இழுத்த... இப்ப வாய்யா... வாய்யான்னு சமூக வலைத்தளத்தில் ரவுண்டு கட்டி அடித்தனர். இதில் அடுத்த பெரிய விஷயம் என்னன்னா இதில் தனுஷ், வெங்கட்பிரபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் இணைந்து கொள்ள இப்ப அந்த தளத்தில் நெருப்புடா... நெருங்குடா என்று கபாலி பாட்டோடு ரசிகர்கள் வலம் வந்து மகிழ்ச்சி... பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். "கபாலிடா".


Find out more: