மும்பை:
நம்ம ஆளுங்க தங்கள் வாழ்க்கையை பார்க்கிறாங்களோ... இல்லியோ... நடிகர், நடிகை வாழ்க்கைன்னா வாயை பிளப்பாங்க என்பதுதான் உண்மையிலும் உண்மை.


இந்தியில் உருவான சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து புகழ்பெற்றவர் வித்யா பாலன். இவர் இந்தி பட தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். 


சந்தோஷ தம்பதிகளாக வாழ்ந்த வந்த இந்த தம்பதி மீது யார் கண் பட்டதோ இருவருக்கும் செம லடாயாம்.  காரணம் இவரோட தோழி கங்கனாரனாவத் என்று காற்று வாக்கில் செய்திகள் உலா வருகிறது.


‘உங்களுக்கும், கணவர் சித்தார்த் ராய்க்கும் மோதலாமே?’ என்று வித்யாவிடம் கேட்டபோது, இது யாருக்கும் தேவையில்லாத வேலை. உண்மையை சொல்கிறேன். எனது திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்று படபடவென பொறிகிறாராம்.


Find out more: