சென்னை:
"கபாலிடா" படத்துல ரஜினி பேசுற இந்த வசனம் இப்ப எல்கேஜி குழந்தைகள் முதல் பல்லு போன பொக்கைவாய் கிழவர் வரை செம ஹிட் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்புறம் என்னன்னு கேட்கறீங்களா? இருக்கே... மேட்டர் இருக்கே.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய திரையரங்கம் என்ற பெருமையை பெற்றது பாரீஸ் நகரில் உள்ள 'ரெக்ஸ் சினிமா'. 100, 500 பேர் இல்ல ஒரே நேரத்தில் 2000 பேர் இங்க படம் பார்க்கலாம். அம்புட்டு பெரிசு. துல்லியமான ஒலி, ஒளி அமைப்பு. பிரமாண்டம்னு இருக்கும் இந்த தியேட்டரில் இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்படவில்லை. அந்த ரெக்கார்டை நம்ம சூப்பர் ஸ்டாரின் 'கபாலி' படம் உடைச்சு இருக்கு.
கபாலியை ரிலீஸ் செய்ய இந்த திரையரங்கம் ஒப்பந்தம் செய்துள்ளதாம். அதுமட்டுமா ரிலீசுக்கு இப்பவே ரஜினியோட பெரிய... பெரிய... மிகப்பெரிய கட் அவுட்டை வைச்சிருக்காங்களாம். இது எப்படி இருக்கு. சும்மாவா... "கபாலிடா" என்று பாரீசில் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவனுக்கு கிடைத்த பெருமையை நினைத்து நினைத்து பூரித்து போகின்றனர்.