சென்னை:
கமல் பாட்டை டைட்டிலா வைச்சு இந்த படத்தை எடுத்துக்கிட்டு வர்றாங்க... கண்டிஷன் போட்டு காதலி தேடுகிறார் சின்னத்திரையிலிருந்து பெரிய திரையில் ஹீரோ ஆகியிருக்கும் ஆபீஸ் விஸ்ணு.
என்ன படம் தெரியுங்களா? "இவன் யாரென்று தெரிகிறதா" படத்தோட டைட்டில்தாங்க இது. காதலர் தினத்தில் பிறந்த ஹீரோ காதலி கிடைக்காமல் படும் பாடுகள்தான் இந்த படத்தின் மைய கருத்தாம். அப்படீங்களா?
சின்னத்திரையில் உலா வந்த ஆபிஸ் விஷ்ணுதான் 'இவன் யாரென்று தெரிகிறதா' என்று ஹீரோவாக டபுள் ப்ரோமோஷன் வாங்கியிருக்கார். இவருக்கு இந்த படத்துல 2 ஜோடியாம்.
இப்படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரு வெளியிட செம அப்ளாஸ் வாங்கியருக்கு. எப்படித் தெரியுங்களா...
''பியூட்டி பார்லருக்குப் போகாத, மொபைல் டாப் அப் பண்ணச் சொல்லாத, ஷாப்பிங் போக வேண்டும் என நச்சரிக்காத பெண்கள் உடனே அறிவழகனை (விஷ்ணு) அணுகலாம். என்று... அட இருங்கப்பா... இதுக்கு மேல அந்த போஸ்டரில் உள்ள விஷயம்தான் கதை இப்படிதான் இருக்கும்னு நம்மளை யூகிக்க வைக்குது. என்ன இருக்கு தெரியுங்களா?
மாதம் ஐம்பாதயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்'' என்று போஸ்டர் வைச்சு இருக்காங்கப்பா... அப்ப படம் எப்படி இருக்கும்.. இந்த போஸ்டரே சொல்லுதே இவன் யாரென்று...