சென்னை:
பட்டென்று சொன்னார்... படத்தையும் போட்டார்... ஆனா இவர் எது சொன்னாலும் அதுவே பிரபலம் ஆக்கிவிடுகிறது. யார் இவர் தெரிகிறதா?
வேறு யாரு... உலகநாயகனின் வாரிசு நடிகைதான். இவர் தன் அப்பாவை போலவே மனதில் படுவதை பட்டென்று பேசிடுவார். அப்புறம் என்ன விளைவுகள் வந்தாலும் அப்ப பார்த்துக் கொள்வார்.  கவலைப்படாதவர்.


இப்போ இவர் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். என்ன தெரியுங்களா? பெமினா இந்தியா பத்திரிகைக்காக ஒரு போஸ் கொடுத்துள்ளார் இவர். அந்தப் படத்தை தன்னோட இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு போட்டார் பாருங்க ஒரு ட்வீட்.  பெமினா இந்தியாவுக்காக ஆக்வர்டாக (அசிங்கமாக) உட்கார்ந்திருப்பதை ரசிக்கிறேன்.. என்று.


தன்னைப்பற்றி இவரே இப்படி ட்வீட் செய்தாலும்... ரசிகர்களின் சொல்லியிருக்காங்க பாருங்க அதுதான் ஹைலைட். என்ன தெரியுங்களா? இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று ஒருத்தரும்... இன்னொருத்தர் அதற்கு மேலேயே போய்விட்டார். நீ ரொம்ப அழகா இருக்கிறாய் ராணியே "ஜொள்ளி"யுள்ளார். உலக நாயகன் போல அவரது வாரிசும் எதை செய்தாலும் அது பிரபலமாகி விடுகிறதே...!


இருந்தாலும் இப்படி எல்லாம் போஸ் கொடுக்காதேம்மா என்று அவரது நலம் விரும்பிகள் தெரிவித்துள்ளனராம். இது குறித்து யோசிப்பாரா வாரிசு.


Find out more: