சென்னை:
கபாலி போல தினம் ஒரு செய்தியாகிறது சிவகார்த்திகேயனின் "ரெமோ". ரஜினி ரசிகர் என்பதால் அவரைப்போலவே செய்திகளும் வருகிறதோ!


ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் நடிப்பது பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே வெளியாகிவிட்டது. இப்ப என்ன செய்தி தெரியுங்களா? இந்த படத்தில பநீதிவ்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். அப்ப கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் இல்லையான்னு கேட்காதீங்க...


இதுல பநீதிவ்யா கவுரவ வேடத்தில் வருவதாக பேச்சு அடிப்படுகிறது. இவரோட அறிமுகமே சிவகார்த்திகேயனுடன்தான். மீண்டும் ஜோடி போட்டு நடித்த காக்கிச்சட்டையும் செம ஹிட். இப்ப இந்த படத்துல சிவா கேட்டுக்கிட்டதால் டாக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். 


ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் பநீதிவ்யா சிவகார்த்திகேயன் நர்ஸாக வேலை பார்க்கும் மருத்துவமனையில் டாக்டராக வரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள். கீர்த்திசுரேசுக்கும் டாக்டர் வேடம்தானாம்.
நட்புக்கு மரியாதை.



Find out more: