சென்னை:
கபாலின்னா மாஸ்... மாஸ்னா கபாலின்னே இப்ப டிரெண்ட் உருவாகிடுச்சு. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரசிகர்களின் உற்சாகம் கரையை கடந்துக்கிட்டே இருக்கு. 


கபாலி படம் என்னைக்கு ரிலீசோ அன்றைக்குதான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் விழா போல். சும்மா சுற்றி சுற்றி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க... மதுரை ரசிகர்கள் சுவர்களை வளைத்து போட்டு கபாலி ஓவியங்களா போட்டு தாக்க...நாங்க விடுவோமான்னு சென்னை ரசிகர்கள் களத்தில் குதிச்சு இருக்காங்க. எப்படி தெரியுங்களா?


மெரினா, கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், காய்கறி சந்தைன்னு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபாலி படம் பொறித்த போஸ்டர், டீ -ஷர்ட், கை வளையம் என்று இலவசமாக கொடுத்து கலக்கி வருகின்றனர். 


படத்தோட டீசர், பாடல் ஒட்டு மொத்த இந்தியாவையே கலக்கி வரும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் அலைகடலாக சீறி பாயுது. சீக்கிரம் வாங்க கபாலி... இன்னும் சாதனைகள் செய்யுங்கள்...



Find out more: