சென்னை:
வம்பு நடிகருக்கு மேரேஜ் செய்ய நல்ல நேரம் வந்திடுச்சாம்.. வந்திடுச்சாம்... அவங்க அப்பா நடிகர் களத்தில் குதித்துள்ளாராம்.
வம்பு நடிகர் தன் பாட்டுக்கு காதல்...காதல் என்று காதலிக்க... அந்த 2 காதலும் புஸ்வாணம் ஆக நொந்துபோய் கிடந்தார். இதற்கிடையில் சினிமா லைப்பிலும் சறுக்கலோ சறுக்கல். இப்போ பசங்க டைரக்டர் கொடுத்த ஹிட் அடுத்தடுத்த படங்களை ஸ்பீட் செய்துள்ளது.
இதுதான் நம்ம மகனுக்கு நல்ல நேரம் என்று நினைத்த அவரது அப்பா நடிகர் மகனே... இனிமேவாச்சும் நாங்க சொல்றதை கேளு. நாங்க பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறோம்னு சொல்ல... சரின்னு வம்பும் தலையாட்டியிருக்காராம்.
ஜோசியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவருடைய அப்பா இப்ப மகனுக்கு பொண்ணும் பார்த்துக்கிட்டே திருமணம் செய்துவைக்க நல்ல நேரத்தையும் தேடுறாராம். வாலை விட்டுட்டு தும்பை பிடிச்சா எப்படி?
சீக்கிரமே வம்பு நடிகரின் திருமண செய்தி வந்திடும்னு கோடம்பாக்கத்து கோடாங்கி குறி சொல்லியிருக்கார்.. குறி சொல்லியிருக்கார்.