சென்னை:
பேய் படம் கொடுத்த ஹிட்டுல கிடைச்ச படங்களை விட இப்ப வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கொடுத்த சக்ஸஸ் நிக்கிக்கு படவாய்ப்பை மழை போல் அள்ளி கொடுத்துள்ளதாம்.
டார்லிங் படம் ஹிட் அடிச்சாலும் ஒன்று இரண்டு படங்கள்தான் நிக்கிக்கு கிடைச்சுச்சு. கோ-2 படம் நல்ல பேரை வாங்கி கொடுத்ததாலும் வசூலில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனா அடிச்சுச்சு பாருங்க அதிர்ஷ்டம் விஸ்ணுவிஷால் வாயிலாக. அவரோட சொந்த தயாரிப்பான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் செம கலெக்சன் பார்க்க இப்போ நிக்கி கல்ராணிக்கு ஏகப்பட்ட படங்கள்.
இப்போ மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு படங்களில் நடிக்கிறார். அதுமட்டுமா ஜீவாவுடன் கீ, விக்ரம்பிரபுவுடன் ஒரு படம் என்று படப்பட்டியல் நீளுது. பல படத்துல நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்துக்கிட்டு இருக்கு. இதனால அவரோட கால்ஷீட் டைரி புல்லோ... புல்லாம். அழகுடன், நன்றாக தமிழும் பேசுவதால் இந்த வாய்ப்புகள் தேடிவந்து வாசல் கதவை தட்டுது... சரியா பயன்படுத்திக்கோம்மா...