சென்னை:
பேச்சு வார்த்தை முடிஞ்சு சமாதானக் கொடி ஆட்டி சண்டக் கோழியை களத்தில் இறக்க முடிவாயிடுச்சாம். என்னங்க புரியலையா?


விஷாலை ஆக்சன் ஹீரோவா உயர்த்தினதே சண்டக்கோழி படம்தான். இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி. இவர்கள் மீண்டும் இணைந்து சண்ட கோழி -2 தொடங்க இருந்தாங்க. ஆனா இடையில லேட்டாக இருவரும் முட்டிக் கொண்டனர். அப்புறம் இந்த படமும் டிராப் ஆனதாக சொன்னாங்க.


இடையில் இருவரின் நலம்விரும்பிகள் தலையிட்டதால சமீபத்தில் மீண்டும் இந்த படத்தை தொடங்க பேச்சு வார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வந்தன. இருந்தாலும் இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது விஷாலின் அடுத்த படம் 'சண்டக்கோழி 2' தான். இதை இயக்குவது லிங்குசாமிதான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
இதுகுறித்து முறையான அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கவிருப்பதாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சமாதானம்... சமாதானம். இதை விட பெரிய விஷயம் வேறு ஏதாவது இருக்கிறதா. அப்ப ஆக்ரோஷமாக சண்ட கோழி களத்தில் இறங்க போகுது....


Find out more: