சென்னை:
இயக்குனராக அடியெடுத்து வைத்து இப்போ சக்ஸஸ் நடிகராக மாறிவிட்ட சசிக்குமார் படங்கள் எப்போதும் நட்புக்கு இலக்கணம் வகுப்பவை என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இப்போ இவர் நடிக்கும் படத்தில் ஏகப்பட்ட இலக்கியவாதிகள் சேர்ந்து நடிக்கிறாங்களாம்.
சசி நடிப்பில் வெளிவந்த தாரை, தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது இருந்தாலும் மக்கள் அவரை ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. படத்தின் தன் பகுதியை அவர் சரிவர செய்திருந்தார். கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம்.
இப்போ இவர் கிடாரி என்ற படத்தில் நடிச்சிக்கிட்டு வர்றாரு. சரி அதுல என்னன்னு கேட்கறீங்களா? இருக்கே. இந்த படத்துல வேல.ராமமூர்த்தி, வசுமித்ரா, மு.ராமசாமின்னு இலக்கியவாதிகள் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறாங்கன்னு செய்திகள் உலா வருது.
அப்ப இது இலக்கிய படமான்னு கேட்காதீங்க. ஹீரோ சசிக்குமார்தானே. அதனால அவர் பாணியில் நட்பின் இன்னொரு பக்கத்தை சொல்லும் படமாக இருக்கலாம் என்று தகவல்.