மும்பை:
தப்பினார்... தப்பினார்... சற்றே இடைவெளியில் உயிர் தப்பினார் என்பதுதான் தற்போது மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி மீட்டுள்ளது. விஷயம் என்ன தெரியுங்களா?
ஹிர்த்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார. இதில் துருக்கியும் அவர்கள் சென்ற வெளிநாடுகளில் ஒன்று.
அங்கு விமானத்தை தவற விட்டு விமான நிலையத்தில் ஹிர்த்திக் அமர்ந்திருக்க... அப்போதுதான் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் அமர்ந்திருந்தது இஸ்தான்புல் விமான நிலையம் என்பதுதான். இங்குதான் தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர், உடனே அங்கிருந்தவர்கள் ஹிர்த்திக் ரோஷனை காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்துள்ளனர். தலைக்கு மேல் தோட்டா பறந்ததா?
இதையடுத்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நன்றி மறவாத நல்ல மனம்.