தெலுங்கானா:
வசூல்... வசூல்.. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே வியந்து பார்த்த பிரமாண்ட படம் பாகுபலி என்றால் மிகையில்லை. தற்போது பாகுபலி சீன மொழி பேசி சீனர்களையும் கவர ஜீலை மாதம் 22ம் வருதாம்.
ராஜமவுலி இயக்கிய இந்த பிரமாண்ட வெற்றிப்படம் வசூலில் கிங்கோ... கிங் என்று சொல்லியடித்தது. இதன் 2ம்பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் சீனா மொழியில் பாகுபலியை டப் செய்துள்ளனர். மார்க்கெட்டிங் பணிகளும் முடிந்துள்ளதாம்.
இதையடுத்து வரும் ஜீலை 22ம் தேதி சீனாவில் 6,500 தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்படுகிறது. பாகுபலியை பார்க்க சீனர்களே நீங்க ரெடியா? சீன மொழியிலும் பாகுபலி பார்ட் 1 வெற்றிக் கொடி நாட்டும் என்கின்றனர்.