சென்னை :
மச்சான்... படம் வந்தா உனக்கு "ஆப்பு" ரெடியாக இருக்கு என்று கோடம்பாக்கத்து அசிஸ்டெண்ட்டுகள் முணுமுணுக்கின்றனர். எதற்காக தெரியுங்களா?
மிர்ச்சி சிவா... நடிக்கிறாரோ இல்லியே... கிண்டல், கேலியை வைத்து இவரது படங்கள் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் இவருக்கு படங்களே இல்லை. இப்போ அட்ரா மச்சான் விசிலு படத்தில் நடிச்சிருக்கார். கூடவே நான்தான் சூப்பர் ஸ்டாருக்கு போட்டின்னு சொன்னவர் நடிக்கிறார். யாரு தெரியுதுங்களா? பவர் இல்லாத அந்த ஸ்டார்தான். இந்த படம் கலாப்பு ரகமாக இருக்கும் என்று தெரிகிறது. எப்படின்னா ஹீரோக்களுக்கு பெரிய பக்கபலமாக இருக்கும் ரசிகர் மன்றத்தை கலாய்த்துதான் இந்த படம் என்கின்றனர்.
அட்ரா மச்சான் விசிலு
உண்மையோ பொய்யோ... படம் வந்து அப்படி இருந்து விட்டால் பெரிய ஹீரோக்களின் கோபப்பார்வை மிர்ச்சி சிவா பக்கம் கண்டிப்பாக திரும்புமாம். பார்ப்போம்.... பொறுத்திருந்து பார்ப்போம்.