சென்னை:
கபாலி படம் பற்றி இனியும் சொல்றதுக்கு என்ன இருக்கு. ஆனா இருக்கே... என்ன இருக்கு... ஆனா இல்ல... புரியலையா...


ரஜினியோட கபாலி படம் செய்யாத சாதனை இல்ல. டீசர், போஸ்டர், பாட்டு, விற்பனைன்னு எல்லா தளத்திலும் கபாலிக்கு வெற்றிக் கொடிதான். இந்த படத்துல புத்தம் புது டீமோட அதுவும் இளசுகள் மத்தியில் தானும் இளமையா மாறி நெருப்புடான்னு ரசிகர்கள் உற்சாகத்தில் குதிக்க விட்டுள்ளார். 


முதல்முறையாக இளமையான இயக்குனர், இசைக்கு புதியவர் சந்தோஷ், இவரது படத்துக்கு பாட்டு எழுதவங்களும் புதுமுகங்கள்தான். பாடறவங்களும் புதுமுகங்களா அமைஞ்சிடுச்சு. ரஜினி படம் என்றால் அதில் ஒரு பாட்டாவது நம் எஸ்.பி.பி. பாடிடுவார். ஆனால் கபாலியில் அவரும் மிஸ்சிங். 


இதை ரஜினியும் கண்டுக்கலையா... அல்லது எல்லாமே இயக்குனர் முடிவுன்னு விட்டுட்டாரா? இசையமைப்பாளராவது ஞாபகப்படுத்தி இருக்கலாமே. என்னாச்சுங்க....



Find out more: