சென்னை:
குறைந்த பட்ஜெட் என்றாலும் அழுத்தமான கதையை வைத்து எடுக்கப்பட்ட மெட்ரோ படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.


சிரீஷ், பாபிசிம்ஹா நடித்த மெட்ரோ தமிழ்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஏக வரவேற்பை பெற்றுள்ளது. மெதுவாக ஆரம்பித்த வெற்றி இப்போது நல்ல வசூலை கொடுத்து கொண்டு இருக்கிறது. இதற்காக சக்ஸஸ் மீட்டிங்கையும் நடத்தி விட்டனர். இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தற்போது தமிழில் கிடைத்த வரவேற்பை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.


தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கலாம் என்று தெரிகிறது. தமிழில் இருந்த அதே தொழிற்நுட்ப டீம்தான் தெலுங்கிலும் தொடர்கின்றனர். அங்கு பட்ஜெட் பெரிசாகி உள்ளது. இந்தி ரீமேக் உரிமையும் செம ரேட்டுக்கு பேசப்பட்டு வருகிறதாம். நல்ல விஷயம் தானே!


Find out more: