ஆந்திரா:
ஆந்திர ரசிகர்கள் அதிர்ந்துதான் போய் உள்ளனர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு... என்ன தெரியுங்களா?


தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணா கார் விபத்தில் சிக்கி காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்தான். அது. தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாரும், எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா தனது தொகுதியான ஹிந்துபூர் சென்றார்.


பின்னர் பெங்களூர் விமான நிலையத்துக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது பாகபல்லி என்ற இடத்தில் நிலைத்தடுமாறிய கார் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் பாலகிருஷ்ணாவும், அவருடன் வந்தவர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் இந்த சம்பவம் ஆந்திர ரசிகர்களை அதிர்ந்து போக செய்துள்ளது. 


Find out more: