சென்னை:
இந்த ஆதாரம் போதுமா... இல்ல இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று தியேட்டர்களில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை விஷால் வெளியிட்டுள்ளார். எதற்காக? இதற்காகத்தான்.


சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதற்கான ஆதாரங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு


'எனக்கு இன்னொரு பேரு இருக்கு' என்ற படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 20ம் தேதி ஜி.வி.பிரகாஷ் மனு அளித்தார்.


இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் சங்க பொது செயலாளரான விஷால், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படம் இணையதளத்தில் எப்படி வெளியானது என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த அதிர்ச்சியான பதிவில் என்ன சொல்லப்பட்டுள்ளது தெரியுங்களா?


இப்படத்தை பெங்களூரிலுள்ள ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் பதிவு செய்தற்கான ஆவணத்தை புகைப்படம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஆதாரங்களை வைத்து சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவர்களை பிடிப்பதற்கு காவல்துறை விரைந்து செயல்படுமா என்ற கேள்வியையும் விஷால் எழுப்பியுள்ளார். இந்த ஆதாரங்கள் போலீசாருக்கு கண்டிப்பாக உதவும் என்று தெரிகிறது. இதுபோல்தான் படங்களின் திருட்டு சிடிக்களும் தயாரிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Find out more: