சென்னை:
ஒருபக்கம் எதிர்பார்ப்புகள் எகிற எகிற ரிலீஸ் தேதியும் தள்ளி வைத்துக் கொண்டே போவதால் ரசிகர் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில் கபாலி படத்தில் மலையாள சூப்பர் ஸ்டாரும் இணைந்துள்ளார். எப்படி தெரியுங்களா?


‘கபாலி’படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 22ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறதாம்.  இதற்கிடையில் ‘கபாலி’-யில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்திருக்கிறார். அவரும் நடித்திருக்கிறாரா என்று கேட்காதீர்கள். 


‘கபாலி’ படத்தை கேரளாவில் வெளியிட மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம் ரூ.8.5 கோடிக்கு வாங்கியுள்ளதாம். தமிழ் நடிகரின் ஒரு படம் இந்த அளவிற்கு விலைக்கு வாங்கப்பட்டது இதுதான் கேரளாவில் முதல் முறை. விஜய்யின் தெறி 5.6 கோடி ரூபாய்க்குதான் வாங்கப்பட்டுள்ளது.


எல்லாம் சரிதான் ஆனால் ரிலீஸ் தானே தள்ளி போகிறது என்று வேதனையில் உள்ளனர் ரசிகர்கள்.


Find out more: