'மதயானைக்கூட்டம்', 'மெட்ராஸ்' உள்ளிட்ட சில படங்களில் ரப் அண்ட் டப்பான வேடங்களில் நடித்தவர் கலையரசன். குறிப்பாக 'மெட்ராஸ்' படத்தில் அவரது நடிப்பு கதாநாயகனாக்கி விட்டது. அந்த படத்தில் அவரது நடிப்பைப் பார்த்த டைரக்டர் உஷா கிருஷ்ணன், தனது 'ராஜமந்திரி' படத்திற்காக காமெடி கதையில் நடிக்குமாறு கலையரசனிடம் கதை சொல்லியிருக்கிறார். 


ஆனால் காமெடி நாயகன் என்றதும் பயந்து போன கலையரசன், எனக்கு காமெடி எந்த அளவுக்கு ஓர்க் அவுட்டாகும் என்று தெரியவில்லையே என   தயங்கியிருக்கிறார். ஆனால் உஷாகிருஷ்ணன், நான் உங்களிடம் வேலை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி ராஜமந்திரியில் கலையரசனை நடிக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும்.


கலையரசன், தற்போது 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற  படத்தில் கமிட்டாயிருக்கிறார்.
இந்த படமும் காமெடி கதைதானாம். ராஜமந்திரியில் அவருடன் காளி வெங்கட் நடித்த நிலையில், இந்த படத்தில் சூரி நடிக்கிறாராம். அதனால் இந்த படத்தில் முந்தைய படத்தை விட காமெடியில் அதிக  ஸ்கோர் பண்ணி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் கலையரசன்.         



Find out more: