ஆந்திரா:
சினிமாவிலிருந்து அரசியல்... மீண்டும் சினிமாவிற்கு திரும்பி உள்ள சிரஞ்சீவியின் 150 வது படம் தான் தற்போது ஆந்திராவை கலக்கி வரும் விஷயம். இதற்கிடையில் பலருக்கு சந்தேகம்... என்ன சந்தேகம் என்கிறீர்களா?


விஷயத்தை பாருங்களேன். 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கிறார். இடையில் தன் மகன் படத்தில் சில நிமிடங்கள் வந்து போனார். ஆனால்மீ ண்டும் பழைய மாதிரி நடிக்க முடியுமா? என்று ஐயம்தான் அது.


இது அவரது காதுக்கும் போயிருக்கும் போலிருக்கு.. இதுக்கு முடிவு கட்ட நினைத்தவருக்கு வந்தது ஒரு சான்ஸ். 'சினி மா' (Cine Maa) விருதுகள் நிகழ்ச்சிக்காக அவரை வைத்து ஒரு சிறப்பு எபிசோட் படமாக்கினர்.


இதில் பங்கேற்ற அவர்த னது சூப்பர் ஹிட் படங்களிலிருந்து 6 கேரக்டர்களை மீண்டும் நடித்துக் காட்டி எல்லாரையும் அசர வைத்து விட்டார். அதே வேகம்...அதே ஸ்டைலில் நடித்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிரஞ்சீவி "சிரஞ்சீவிதான்டா" என்று கம்பீரமாக நடை போட்டுள்ளார். சந்தேகப்பட்டவர்கள் இப்போது வாயடைத்து போய் உள்ளனராம்.


Find out more: