சமுத்திரக்கனி தயாரித்து, இயக்கி உள்ள 'அப்பா’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தையொட்டி சமுத்திரக்கனி திரையுலக பிரமுகர்கள், நடிகர், நடிகைகளிடம் அவர்களது அப்பாக்கள் பற்றி கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து யூ-டியூப்பில் பதிவிட்டு வருகிறார். சமுத்திரக்கனி மலையாளப் படங்களிலும் நடித்து வருவதால் அங்கும் அவருக்கு நண்பர்கள் அதிகம். மோகன்லால் உள்பட பலரும் அப்பா பற்றி பேசியுள்ளார்கள். அதில் நடிகை மஞ்சுவாரியார் தன் அப்பா பற்றி பேசிய வீடியோ கேரளாவில் வைரலாக பரவி வருகிறது.
அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை. கடவுளே வரமாக கிடைத்தார். அதுதான் என் அப்பா. நாகர்கோவிலில் தன் எனது பால்ய காலம் கழிந்தது. அப்பா ஒரு சின்ன வேலையில் இருந்தார். சொற்ப சம்பளத்தில் எங்கள் ஆசைகள், கனவுகள் நிறைவேற்ற பாடுபட்டார். எங்களை சிரிக்க வைப்பதற்காக அவர் உள்ளுக்குள் அழுதிருக்கிறார். நான் அணிந்த சலங்கை அவர் கண்ணீர் முத்துக்களால் ஆனது. நான் காதலித்த போதும், சுயமா சில முடிவுகள் எடுத்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தார்.
நாங்கள் தளர்ந்தபோது மரமாக நின்று எங்களை தாங்கி பிடித்தார். அவர் நாங்கள் அவரை தாங்கிப் பிடித்தோம். அம்மா கடல் என்றால் அப்பா கரை. அப்பா தெய்வம் என்று நா தளுதலுக்காவும், கண்ணீர் சிந்தவும் பேசியிருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த பேச்சு கேட்பவர்களை நெகிழ வைக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 'அப்பா' படத்துக்கு கேரளாவில் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறது.